June 11, 2018
தண்டோரா குழு
தமிழகத்தின் அமைதியையும் வளர்ச்சியையும் கெடுக்கும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, அமீர் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படக் காரணம் தமிழக அரசில் இருக்கும் ஊழல் தான். ஆனால், சிலர் ஜிஎஸ்டி வரியை அதற்குக் காரணம் காட்டுகிறார்கள் அது திட்டமிட்ட சதி. ஜிஎஸ்டி வரி விதிப்பினால், ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தினம் தினம் ஊழல் நடந்தது. தற்போதைய பாஜக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சில அமைப்புகள் கடந்த 3 மாதமாக சதித்திட்டம் தீட்டி வருகின்றன. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வரும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனக் கூறினார்.