• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறையுடன் இணைத்து குளத்தை தூர் வரியா ரவுடிகள்

June 9, 2018 தண்டோரா குழு

போலிஸும் ரவுடிகளும் இணைந்து பெங்களுரிவில் உள்ள பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் ஏரியை சுத்தம் செய்துள்ளனர்.

பெங்களூர் புறநகரான அனேகல் பகுதியில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்று ஹரப்பனகல்லி ஏரி. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் முழுமையாக புதர்கள் மண்டி பாழடைந்து காணப்பட்டது.
இதனை ஏன் மீட்டுக் கொண்டு வரக் கூடாது என யோசித்த காவல்துறையினர் பல்வேறு வழகுகளில் தொடர்புடைய ரவுடிகளை வைத்து சுத்தம் செய் முடிவு செய்தனர்.

இதனையடுத்து அடுத்த நாள் 125 காவலர்களும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 100 ரவுடிகளையும் அழைத்துக் கொண்டு ஏரியை தூர் வார புறப்பட்டனர் காலையில் ஆரம்பித்த அடுத்த 8 மணி நேரத்தில் ஏரியில் இருந்த அனைத்து செடிகள், புதர்கள் அகற்றப்பட்டது. தூர்வாரும் பணிக்காக ஒன்பது படகுகள் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டது. தூர்வாரி அள்ளப்பட்ட குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு குப்பை சேமிப்பு கிடங்குகளில் கொட்டப்பட்டது. ரவுடிகளையும் வழக்குகளில் சிக்கியவர்களையும் வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பதற்கு இந்தப் பணி ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.

அதோடு ஏரியை பராமரிக்கும் பணியையும் ரவுடிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர் மேலும் குளத்தில் மீன் வளர்க்கும் பணியை மற்றொரு ரவுடி மேற்கொள்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த குளத்துக்கு ‘போலீஸ் குளம்’ என பெயர் வைக்கப்பட்டது.

மேலும் படிக்க