• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவின் புகழ் பெற்ற சமையல் கலைஞர் தற்கொலை

June 9, 2018 தண்டோரா குழு

அமெரிக்காவின் புகழ் பெற்ற சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் 61 வயதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் முன்னால் அதிபர் ஒபாமா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் (வயது 61). இவர் சமையல் மட்டுமின்றி எழுத்தாளர் தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத் தன்மை கொண்டவர். உலகம் முழுவதும் சென்று விதவிதமான உணவு வகைகளை சமைத்து பெயர் பெற்றவர். அந்தோணி தயாரித்துள்ள உணவு வகைகள், பானங்கள் பெரும் பிரசித்த பெற்றவை. சமையல் கலைக்காக அவர் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியில் ‘பார்ட்ஸ் அன்நோன்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு விருதும் பெற்றுள்ளார்.இந்நிலையில் சமையல் நிகழ்ச்சி படபிடிப்புக்காக பிரான்சில் தங்கியிருந்து பார்ட்ஸ் அன்நோன் சீரியலுக்காக பணியாற்றி வந்த அவர் அங்குள்ள சொகுசு அறையில் தங்கியிருந்தார். அந்தோணி போர்டைன் விடிந்து நெடுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் நண்பர்கள் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அவர் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு சக சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு தங்களுக்கு பேரிழப்பு என சிஎன்என் தெரிவித்துள்ளது.

அந்தோணி மறைவு தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் மறைவு குறித்த தகவல் அதிர்ச்சி அளித்ததாகவும் அவரது குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அதைபோல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அந்தோணியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்தோணியின் சீரியலை மிகவும் ரசித்து பார்ப்பதாகவும் கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்ததாகவும் கூறினார். மேலும், வியட்நாம் சென்றபோது அந்தோணியுடன் அமர்ந்து உணவு அருந்தியதையும் ஒபாமா நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் படிக்க