• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யாஹூ மெசேஞ்சர் சேவை ஜூலை 17-ஆம் தேதியுடன் நிறுத்தம் !

June 9, 2018 தண்டோரா குழு

யாஹூ மெசேஞ்சர் சேவை அடுத்த மாதம் 17-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில் குறுந்தகவல்களை அனுப்ப வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசேஞ்சர் என பல்வேறு அதிநவீன செயலிகள் வந்துவிட்டன. ஆனால், உலகிலேயே முதல்முறையாக குறுந்தகவல் அனுப்ப 1998-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி யாஹூ பேஜர் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய நிலையில் யாஹூ பேஜர் சேவை பிரபலம். ஆனால், தற்போது அதிநவீன குறுந்தகவல் அனுப்பும் வசதிகளின் ஆதிக்கம் அதிகரித்ததால், யாஹூ மெசேஞ்சரின் மவுசு குறைந்து போனது.

இதனால், யாஹூ மெசேஞ்சர் சேவையை ஜூலை 17-ஆம் தேதி முதல் நிறுத்திக் கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஹூ மெசேஞ்சர் பயன்பாட்டாளர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை அடுத்த மாதங்களுக்கு டவுன்லோடு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஹூ மெசேஞ்சருக்கு மாற்றாக, யாஹூ ஸ்குரெல் ((Yahoo Squirrel)) என்ற செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க