• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெக்ஸிகோ நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பலி

August 8, 2016 தண்டோரா குழு

தென் அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ தேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சுமார் 38 பேர் பலியாகி உள்ளனர்.கிழக்கு மெக்சிகோவில் உள்ள பியூப்லா என்னும் நகரில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சுமார் 15 குழந்தைகள் உட்பட 28 பேர் சிக்கி பலியாகி உள்ளனர்.

அதே போல், அந்நாட்டில் உள்ள வெராகுரூஸ் நகரிலும் ஏற்பட்ட நிலச்சரிவிலும் சுமார் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதனால் பல பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

அங்குக் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இரு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.அதுமட்டுமின்றி 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கரிப்பியன் நாடுகளில் ஏற்பட்ட இந்தப் புயல் பெலிசே நகரைக் கடந்த புதன்கிழமையன்று தாக்கியுள்ளது.

இப்புயல் அதிகமாக வலுவடைந்து நேற்றைய தினம் மெக்ஸிகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களைக் கடுமையாக தாக்கியதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜாவியர் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் தென்மேற்கு மெக்ஸிகோ நகர்களுக்கு அதிக மலையும் பலத்த காற்றும் கொண்டுவரக்கூடும் என்றும் ஐக்கிய அமெரிக்க வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

மக்கள் இந்தச் சம்பவத்தால் தாங்கள் வீடுகளை இழந்து விட்டனர். அதனால் அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று அந்நாட்டின் ஆளுநர் ராப்கேல் மொரேனோ வாலே தெரிவித்ததோடு அந்தப் பகுதிகளில் சிக்கித் தவித்த மக்களுக்குத் தான் செய்த பணிகளின் புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க