பிரதமர் நேற்று தெலுங்கானாவிற்கு வந்து சென்ற நிலையில் இன்று அதிகாலை முதல் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இருவர் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மேஹபூப்நகரில் உள்ள ஷாட்நகர் மில்லேனியம் டவரில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியைச் சுற்றிவளைத்த தெலுங்கானா காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் சரணடையக் கூறியுள்ளனர்.
ஆனால் தாக்குதலைத் துவங்கியதால் காவல்துறையினரும் எதிர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் தீவிரவாதி என நம்பப்படும் நதீம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் இருப்பவர்களைப் பிடிக்க முயற்சிப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் பிரதமரின் நிகழ்ச்சியைக் குறிவைத்து வந்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரதமர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத மேடையில் இருந்து பேசவேண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு