• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் ஆசை, நீங்க எல்லோர் முன்னிலையிலும் தலைநிமிர்ந்து வாழனும்,மாணவி பிரதிபா எழுதிய உருக்கமான கடிதம்!

June 6, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து,தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதிபா, தன் தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம்,பெரவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதிபா.இவர் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.கூலித் தொழிலாளியின் மகளான இவர் கடந்தாண்டு,12ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்களும்,கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மாணவி பிரதிபாதன் தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.அதில்,உங்ககிட்ட சொல்ல விரும்புவது இதுவே கடைசி என தொடங்கி,என்னால ஜெயிக்க முடியல என்றும்,என் மேல வச்சிருந்த நம்பிக்கையை காப்பாத்த முடியல என்றும் தெரிவித்துள்ளார்.

என் ஆசை,நீங்க எல்லோர் முன்னிலையிலும் தலைநிமிர்ந்து வாழனும்,ஆனால் என்னால் அதை செய்ய முடியலை.என் குடும்பம் நீங்க எல்லோரும் எனக்கு கிடைச்ச வரம் அப்பா.ஆனால் நான் உங்களுக்கு கிடைச்ச சாபம் என நினைக்கிறேன்.எனக்கு தோல்வியை தாங்குகிற சக்தியில்லை. எல்லோருடைய நம்பிக்கையையும் இழந்து விட்டேன்.இந்த முடிவு கோழைத்தனமாக தெரியலாம்,நம்ம மேல வச்சிருக்க நம்பிக்கையை அழிச்சிட்டு வாழுறதை விட இந்த முடிவு சரியானது எனவும் கூறியுள்ளார்.

மேலும்,எல்லோரையும் விட்டுட்டு போகனும்னு நினைக்கும் போது ரொம்ப வலிக்குது,அதைவிட அதிகமான வலியை தோல்வி தந்து விட்டதாகவும் கடிதத்தில் மாணவி பிரதிபா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க