• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனிமேல் நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை – லட்சுமி ராமகிருஷ்ணன்

June 6, 2018 தண்டோரா குழு

இனிமேல் நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக நடத்தப்பட்டு வந்த நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை.இந்நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்தார்.இதற்கிடையில்,நிகழ்ச்சியில் பங்கு பெறும் குடும்பங்களின் அடிப்படை மற்றும் தனி மனித உரிமைகளை பாதிக்கிறது என்றும்,அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் விவாதிக்கும் போது மற்றொரு தரப்பினரின் உரிமை பாதிக்கப்படுவதாக கூறி ராஜபாளையத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு ஜூன் 18ம் தேதி வரை இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.இந்நிலையில்,நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“நிகழ்ச்சியின் சாரம் வேண்டுமானால் விவாதத்திற்குட்பட்டு இருக்கலாம்.ஆனால்,அதிலிருக்கும் உண்மை தன்மையை மதிக்க வேண்டும்.ஒரு தொடரில் கூட நான் என்னுடைய கருத்துகளை அதில் திணித்ததில்லை.மேலும் தொலைக்காட்சியின் டிஆர்பிக்காக நான் பங்கேற்பார்களையும் தூண்டி விட்டதில்லை.ஒவ்வொரு தொடரையும் நான் உணர்வுப்பூர்வமாகவே நடத்தி இருக்கிறேன்,பின் விளைவுகளை பற்றி யோசித்ததில்லை,நான் நிகழ்ச்சியின் மீது நம்பிக்கை வைத்தேன். இனிமேல் நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை..,இது என் முடிவு” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க