• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுமார் 1,50,00 கி.மீ., பயணித்து மாஸ்கோ சென்ற உலகக்கோப்பை!

June 6, 2018 tamilsamayam.com

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான கோப்பை சுமார் 1,50,000 கி.மீ., சுற்றி மாஸ்கோ வந்தடைந்தது.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

இதையடுத்து இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடக்கிறது.சுமார் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.

இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது.கடந்த 32 ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடருக்கு அமெரிக்க ஆண்கள் அணி தகுதி பெற தவறியது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ல்,வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் 36 செ.மீ., உயரம் கொண்ட உலக கோப்பை உலகை சுற்றி வந்தது.ஆறு கண்டங்களில் சுமார் 50 நாடுகள் பயணம் செய்த இந்த கோப்பை,கடந்த மாதம் ரஷ்யா சென்றடைந்தது.ரஷ்யாவின் 91 நகரங்களுக்கு சென்ற கோப்பை 1,50,000 கி.மீ., துாரம் பயணித்த பின் மாஸ்கோ சென்றடைந்தது.

மேலும் படிக்க