• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல – ரஜினிகாந்த்

June 6, 2018

காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல இதை புரிந்து கொள்ள வேண்டும்.காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலாவை ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது.

கர்நாடகாவில் படத்தை பிரச்னையின்றி வெளியிடுவது தான் வர்த்தக சபையின் வேலை,ஆனால் வர்த்தகசபை காலாவிற்கு தடைவிதிப்பது சரியில்ல.காலா படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம்,கர்நாடகாவில் மட்டும் ஏதோ வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை.

உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ள காலா கர்நாடகாவில் திரையிடவில்லை என்றால்,அதற்கான காரணம் தெரிந்தால் அது கர்நாடகாவுக்கே நல்லா இருக்காது.கர்நாடகாவில் காலா வெளியாகவில்லை என்றால் அது கர்நாடகா மக்களுக்கு தலைக்குனிவு.மேலும்,காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க