• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குவாட்டமாலா எரிமலை வெடித்து 62 பேர் உயிரிழப்பு

June 5, 2018 தண்டோரா குழு

குவாட்டமாலாவின் உள்ள எரிமலை வெடித்ததில் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்கின்ற எரிமலை சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் உள்ளது.இந்த எரிமலையானது வானத்தை நோக்கி புகையையும் சாம்பலையும் விட்டுக்கொண்டிருக்கும்.

இந்நிலையில் இந்த எரிமலை ஒரு ஆறு போன்று வெளியேறி,எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்கின்ற கிராமத்தை நோக்கி நகர்ந்தது அதனால் அங்கு இருந்த வீடுகள் மற்றும் அங்கு இருந்த மக்கள் அனைவரும் தீயில் சிக்கி பலியாகினர்.அந்த எரிமலையில் தொடர்ந்து கக்கி வரும் சாம்பல் காரணமாக குவாட்டமாலாவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.இதனால் தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டிற்கு பின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு இது என்று வல்லுனர்கள் தெரிவிதுள்ளனர.தற்போது நடந்த எரிமலை வெடிப்பில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இதில் பாதிக்கபட்டோரை தற்காலிக முகாமில் தங்க வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும் படிக்க