• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிளாஸ்டிக்கை தடை செய்ய வலியுறுத்தி மாணவர்கள் பேரணி

June 5, 2018 தண்டோரா குழு

கோவையில் ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வலியுறுத்தி தலையில் அந்த பிளாஸ்டிக் பேக்கை அணிந்து பள்ளி மாணவர்கள் நூதன முறையில் பேரணியில் ஈடுபட்டனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர்கள்,மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம்,சுற்றுச்சூழலை மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக,கோவை ரயில் நிலையத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் தலையில் பிளாஸ்டிக் பேக்கை அணிந்து பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களான கப்,பிளேட்,பேக்,ஸ்ட்ரா உள்ளிட்டவைகளால் பல்வேறு சூழல் கேடு ஏற்படுவதாகவும்,பெரும்பாலும் அதன் பயன்பாடு வீட்டில் உள்ளதால் தனிமனித நடவடிக்கையின் வாயிலாக இவ்வகையான பிளாஸ்டிக்கை நிரந்தரமாக அழிக்க முடியும் என்றும், இதனால் நீர்,நிலங்கள் மாசுபாடு குறைக்க முடியும் என்று பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க