June 5, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வில் தோல்வியால் செஞ்சி அருகே உள்ள வெள்ளூந்தூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நீட் தேர்வில் தோல்வியால் பிரதீபா தற்கொலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்திவிட்டது; கல்வி உரிமை மறுப்பை நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம் போல் படிக்க திரன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள்.யாரிடமும் நம் உரிமையை கேட்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்..அடுத்த படுகொலைகள் நோக்கி!”