June 4, 2018
தண்டோரா குழு
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற,67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்றவர்களில் முதல்கட்டமாக 67 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.இது தொடர்பாக அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-ன்படி,மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் அரசாணைகள் மூலம் நெறிமுறைகள் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.