• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலாவுக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம் – பிரகாஷ் ராஜ் கேள்வி

June 4, 2018 தண்டோரா குழு

காலா படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் குரல் எழுப்பியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், ‘காலா’.வரும் 7-ம் தேதி படம் வெளியாகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.இதற்கு கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்தது.அதைப்போல் முதல்வர் குமாரசாமியும் இதில் தலையிட முடியாது என்று கை விரித்துவிட்டார்.

இதனால் கர்நாடகாவில் காலா படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கிடையில், காலா படத்தை தடை செய்ய நீங்கள் யார் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாகக் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

ஒரு மூத்த நடிகர் மற்றும் அரசியல் தலைவராகக் காட்டிக்கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து சொல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.காவிரி குறித்து பேசும்போது கன்னட மக்களும் சரி தமிழர்களும் சரி உணர்ச்சி வசப்படுகிறோம்.இந்த விவகாரத்தில் நடைமுறைக்கு ஏற்றபடியும் சிந்திக்க வேண்டி தேவை உள்ளது.ஆனால்,ஒரு நடிகரின் கருத்திற்காக ஒரு திரைப்படம் தடைசெய்யப்படுவது குறித்து தான் கவலைகொள்கிறேன்.இது ரஜினி மட்டும் தொடர்புடையது இல்லை.அவருடன் நடித்த நடிகர்கள் முதல் விநியோகஸ்தர் வரை அனைவரும்
பாதிக்கப்படுகின்றனர்.பிரச்னைக்கு இதுதான் தீர்வா? அனை வருக்கும் போராட உரிமை உள்ளது.

காலாவுக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம்.ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் திரைப்படத்தை மக்கள் பார்க்காமல் இருக்கலாம்.அப்படிச் செய்தால்தான் மக்கள் எதிர்க்கிறார்களா எனத் தெரியும்.பெரும்பான்மை மக்களுக்கு என்ன தேவை என்பதை வெகு சிலரே தீர்மானிக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.மேலும்,ரஜினி படத்தை பார்ப்பதா இல்லையா என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும். தடை செய்வதற்கு நீங்கள் யார்?என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க