• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆகுமா ? ஆகாதா ? என்ன சொல்கிறார் முதல்வர் குமாரசாமி

June 1, 2018 தண்டோரா குழு

பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள காலா. ஜூன் 7-ம் தேதிஉலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே டீசர் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்ததால்கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என ஒரு சில கர்நாடக அமைப்புகளும் கட்சிகளும் கூறிவந்தன. இதையடுத்து,கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அமைப்பு காலா படத்தை வெளியிட தடை விதித்தது. இதுமட்டுமின்றி, முதல்வர் குமார்சாமியிடமும் காலா படத்தை வெளியிட விருப்பமில்லை எனவும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்து செய்தியாளர்கள் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் கேட்டதற்கு அந்த மனு பரிசீலனையில் உள்ளது.மக்கள் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டால் அரசு அதில் தலையிட முடியாது.கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அமைப்பு காலா படத்தை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்துவிட்டது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க