June 1, 2018
தண்டோரா குழு
ஹைதராபாத் நகர போலீசார் 72 சிறைக் கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றங்களுக்காக தண்டனை பெற்று பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் குடும்பங்களுக்கு ஹைதராபாத் நகர காவல்துறையினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பலரின் குடும்பத்தினர் படிப்பறிவில்லாமல் ஏழ்மையிலும்,வறுமையிலும் வாடுகின்றனர்.மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இத்தகைய குடும்பங்களுக்கு சமூகத்தில் யாரும் ஆதரவு அளிப்பதில்லை.இதனால் ஹைதரபாத் காவல்துறையினர் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் முதியவர்களுக்கு உடல் நல சிகிச்சையளிக்கவும் மன ரீதியான பாதிப்புகளைக் களைய ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.