• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரவிசாஸ்திரி, டிராவிட்டுக்கு மட்டும் சலுகையா? – பிசிசிஐ அதிகாரிகள் அதிர்ச்சி

June 1, 2018 tamilsamyam.com

ரவிசாஸ்திரி,டிராவிட்டு மட்டும் சலுகை அளிக்கும் வகையில் கிரிக்கெட் நிர்வாக குழுவின் முடிவால் பிசிசிஐ அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர உச்சநீதிமன்றத்தில்,லோதா தலைமையிலான ஒரு குழு அமைத்தது.அவரின் ஆலோசனையின் பெயரில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

லோதா குழு பரிந்துரைத்த 90% பரிந்துரைகள் உச்சநீதிமன்றம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அதன் படி பிசிசிஐ.,யில் இருக்கும் ஒரு நபர் இரண்டு சம்பளம் வாங்கும் பெரும் பதவியில் இருக்கக் கூடாது என்ற முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கை நடைமுறைக்கு வந்தால் ரவிசாஸ்திரி, டிராவிட் போன்றவர்களுக்கு பிரச்னை ஏற்படும்.டிராவிட் இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக இருந்தார்.அதோடு ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்படும் வகையில் இந்திய ‘ஏ’ அணிக்கு பயிற்சியாளராக 10 மாதமாக இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது.இப்படி டிராவிட் செயல்பட்டால் ஐபிஎல் அணி பயிற்சியாளராகவும்,இந்திய ‘ஏ’அணி என இரட்டை சம்பளம் கிடைத்து வந்தது.

இந்நிலையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால் இந்திய ‘ஏ’ அணிக்கு 12 மாதங்கள் பயிற்சியாளராக இருந்தாக வேண்டும்.அதே போல் ரவிசாஸ்திரி பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும் இருக்க முடியாததால்,வர்ணனையாளர் வேலையை உதறி தள்ளினார்.

இந்நிலையில் இவர்கள் இருவர் நிலை குறித்து மட்டும் நிர்வாகம் மறுபரிசீலனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்களுக்கு சலுகை வழங்கப்படுவது மற்ற பிசிசிஐ அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மேலும் படிக்க