May 31, 2018
தண்டோரா குழு
போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்லஎன இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் எனக் கூறினார்.நேற்று ரஜினி தூத்துக்குடி சம்பவம் குறித்து சமூக விரோதிகளால் தான் போராட்டம் கலவரமானது என பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.அதைபோல் போராட்டம் தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்றும் ரஜினி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சில அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் ப.ரஞ்சித்,
போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல.சில பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தி உரிமைகளைப் பெறுவதில் தவறில்லை. போராட்டம் நடத்தியே உரிமைகளை பெற வேண்டியுள்ளது. தூத்துக்குடி மக்களின் வலிகளை அறிந்த பிறகு ரஜினி கருத்துதெரிவித்துள்ளார் என ரஞ்சித் கூறியுள்ளார்.