May 30, 2018
தண்டோரா குழு
உதகையில் ஊதிய உயர்வை அமுல்படுத்த கோரி அஞ்சல் ஊழியர்கள் திருவோடு எடுத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் இன்று(மே 30)ஈடுபட்டனர்.
கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது.இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் 9 ஆவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் 7 வது ஊதிய குழு கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும்,கடந்த 8 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் 9 வது நாளான இன்று நீலகிரியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தபால் அலுவலகம் முன்பு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.