May 30, 2018
தண்டோரா குழு
குறிப்பிட்ட மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீட்டு தொகை 70% வரை வழங்கபடுவதாகவும்,இதனால் ஓய்வூதியர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி ஓய்வூதியர்கள் கோவையை அடுத்த டாடாபாத் பகுதியில்,தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு ஒப்பந்தம்,அடுத்த மாதம் புதுப்பிக்க உள்ள நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும்,அனைத்து சிகிச்சைகளையும் காப்பீட்டின் கீழ் இலவசமாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும் பிற மாநிலங்களில் எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கான முழு செலவு தொகையையும் ஏற்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.