• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகரித்து விட்டனர் – ரஜினி

May 30, 2018 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் விஷ கிருமிகள் அதிகரித்து விட்டனர் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில்,பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில்,துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களையும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறவும் நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றார்.

இதையடுத்து,திறந்தவெளி வாகனத்தில் தூத்துக்குடி மக்களை சந்தித்தார். பின்னர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரூபாயும் ரஜினி வாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,

“துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.துப்பாக்கிச் சூட்டால் தூத்துக்குடி மக்கள் பயந்துபோய் உள்ளனர்.தூத்துக்குடி சம்பவம் போன்று இனி நடக்கக்கூடாது.

தூத்துக்குடி போராட்டத்தில் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை.ஸ்டெர்லைட் குடியிருப்புகளை எரித்தது சமூக விரோதிகள் தான்.சமூக விரோதிகள் அதிகரித்து விட்டனர்.மக்கள் கவனமாக போராட வேண்டும்.அரசு இரும்பு கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்க வேண்டும். இந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டியே ஆக வேண்டும்.ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது சமூக விரோதிகள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு வரவே கூடாது.அப்படி வந்தால் அவர்கள் மனிதர்களே இல்லை.எல்லாவற்றிற்கும் ராஜினாமா என்பது தீர்வல்ல.தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகின்றனர்.சமூகவிரோதிகள் உள்ளே வந்ததை கண்டுபிடிக்க தவறியது உளவுத்துறையின் தவறு.போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சமூகவிரோதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.தொடர்ந்து போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எப்படி தொழில்துறை வளர்ச்சி அடையும்? தமிழகம் போராட்ட பூமியாக இருந்தால் தொழில் தொடங்க யாரும் முன்வர மாட்டார்கள்.தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க