May 30, 2018
தண்டோரா குழு
தமிழக பள்ளி கல்வி வரலாற்றில் முதல் முறையாக 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, அதனுடைய முடிவுகள் வெளியிடப்பட்டது.
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே இதுவரை பொதுத் தேர்வுகள் நடைபெற்று வந்தது.தமிழக பள்ளி கல்வி வரலாற்றில் முதல் முறையாக 2017-18-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,63,668 மாணவ-மாணவிகள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில்,தேர்வு எழுதிய சுமார் 91.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதன்படி 97.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் இரண்டாவது இடத்தையும் கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மாணவர்கள் 87.4% தேர்ச்சியும்,மாணவிகள் – 94.6% தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.அதைப்போல் 188 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் 2,054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.இயற்பியல் – 93 %, வேதியல் – 92.7%, உயிரியல் – 92.6%, தாவரவியல் – 89.3%, விலங்கியல் -91.8%, கணிதம் – 92.5%, கணினி அறிவியல் – 95.3% தேர்ச்சி பெறுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் முடிவுகளை தமிழக அரசின் இணையதளங்கள் மூலமாக பார்த்து வருகின்றனர். மேலும்,மறு கூட்டலுக்கும் விடைத்தாள் நகல் பெறவும் ஜூன் 1-4ம் தேதி வரை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.