May 29, 2018
தண்டோரா குழு
மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் கிராம பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ய விராட் கோலியை அழைத்து வருகிறேன் என்று கூறி போலி விராத் கோலியை அழைத்து வந்த சுயேச்சை அழைத்து வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளர்.
பொதுவாக தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மக்களிடம் வாக்கு சேகரிக்க சினிமா நட்சத்திரங்களை அழைத்து வந்து தங்களுக்கு பிரச்சாரம் செய்ய வைப்பார்கள். அதேபோல, புனே மாவட்டத்தில், ராமலிங்கா கிராம பஞ்சாயத்தில் சிரூர் கிராமத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. அப்போது அங்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட வித்தால் கணபதி கவாதே என்பவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை எனக்காகப் பிரச்சாரம் செய்ய 25-ம் தேதி அழைத்து வருகிறேன் மக்களிடம் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, அதை விளம்பரப்படுத்தி சுவரொட்டிகளையும் ஒட்டி இருந்தார். இதனை மக்களும், இளைஞர்களும் நம்பினார்கள். இதனால் கடந்த 25-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்கு விராட் கோலி வருவார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், வந்தது விராத் கோலி அல்ல அவரது அவரை போல் போலியாக உள்ள நபர். இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விராட் கோலியை நேரில் பார்க்கலாம் என்று திரண்டிருந்த மக்கள் கோலியைப் போலி கோலி பார்த்து ஏமாற்றமடைந்தனர்.
இதனால் கோபத்தில் விராட் கோலியை அழைத்து வருகிறேன் எனக் கூறி விராட் போலியை அழைத்துவந்துவிட்டாய் வேட்பாளருடன் சண்டையிட்டனர். அவர் சிரித்து விட்டே எனக்கு வாக்களியுங்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்.