May 28, 2018
தண்டோரா குழு
கபாலி படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கதில் ரஜினி நடிப்பில் தனுஷின் வண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காலா.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு மேலுமொரு இன்ப அதிர்ச்சியை அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காலா படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் எனக் கூறியுள்ளார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்படத்தக்கது.