May 28, 2018
தண்டோரா குழு
தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்ததித்தார்,
அப்போது,கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமாக சூழல் நிலவுகிறது, குமரிக்கடல், கேரளா, கர்நாடகா கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
மேலும்,மே 31ஆம் தேதி வரை குமரிக்கடல், லட்சத்தீவு, அந்தமான் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் அவர் கூறினார்.
மேலும், மார்ச் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 150 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த காலத்தில் பெய்ய வேண்டிய 122 மி.மீட்டர் தான். தற்போது 23 சதவீதம் அதிகம் மழை பொய்வு கண்டுள்ளது. மே 1ம் தேதி முதல் இன்று வரை அதிகப்பட்சமாக திருத்தணியில் 42.6 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி, வேலூர், கரூர் பரமத்தி , மதுரை, சேலம் ,தர்மபுரிஉள்ளிட்ட 7 இடங்களில் 40 டிகிரி செல்சியஸ்சுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது எனக் கூறினார்.