May 26, 2018
தண்டோரா குழு
குழந்தை மொபைல் போன் பட்டனை விழுங்கியதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் இவருக்கு 3 வயதில் உத்தேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று செல்போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராதவிதமாக செல்போன் பட்டனை பிய்த்து விழுங்கியுள்ளது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர்.
தற்போது குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இது குறித்து தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.