May 26, 2018
தண்டோரா குழு
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டியிடவுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் வரும் ஜூலை மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து மாகாணத்துக்கான சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியில் கட்சி தலைவர்களும் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 2 திருநங்கைகளும் மாகாண சட்டசபை தேர்தலில் 11 திருநங்கைகளும் போட்டியிடவுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 13 திருநங்கைகள் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும்.
கடந்தாண்டு 4 திருநங்கைகள் போட்டியிட்ட நிலையில் இந்தாண்டு 13 திருநங்கைகள் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் உடல் உறுப்பு மாற்று ஆப்ரேஷன் செய்து கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது