May 26, 2018
தண்டோரா குழு
தனக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் குறித்து ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில்,விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா தனக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் குறித்து பேசிய ஆடியோ பதிவை, மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார்.அதைபோல், ஆகஸ்ட் 2ஆம் தேதி தனக்கு என்ன உணவு தேவை என்பது குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவே கைப்பட எழுதிய உணவுப் பட்டியல்
காலையில் ஒன்றரை இட்லி, 4 ரொட்டி துண்டுகள், காபி, இளநீர், ஆப்பிள், பிஸ்கட் . மதிய உணவாக சாதம், தயிர், முலாம்பழம்.இரவு உணவாக உலர் பழங்கள், இட்லி உப்புமா, தோசை, ரொட்டி, பால் சாப்பிடுவதாக எழுதி ஜெயலலிதா வைத்துள்ளார்.