May 26, 2018
தண்டோரா குழு
தனது வேலையில்லாத மகனை வீட்டை விட்டு வெளியேற்ற நீதிமன்றத்தை நாடிய வயதான தம்பதி.
பெரும்பாலும் இந்தியாவில் தான் வீட்டை விட்டு வெளியேற்றபடுவதாக முதியோர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள்.ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நியூயார்க் நகரில் வாழும் ஒரு வயதான தம்பதி தனது வேலை இல்லாத மகனை வீட்டை விட்டு வெளியற வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார்கள். அவர்கள் அந்த வழக்கில் வெற்றியும் அடைந்தனர்.
மார்க் ரோடோண்டோ மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினா,தங்கள் மகன் மைக்கேல் ரோடோண்டோ வேலை இல்லாத காரணத்தால் வீட்டை வீட்டு வெளியேறு மாறு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் கூறியுள்ளனர்.ஆனால் அவரது மகன் வீட்டை விட்டு செல்லாததால் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சிராகசில் உள்ள நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கில் வெல்வதற்காக மைக்கேல் ரோடோண்டோ மேற்கொண்ட அணைத்து சட்ட ஆராய்ச்சிகளையும் நீதிபதி டொனால்டு கிரீன்வுட் பாராட்டி வந்தாலும், விசாரனையின் முடிவில் அவரை வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளிய செல்ல வேண்டும் என மைக்கேலுக்கு உத்தரவிட்டார். வழகரிஞர்கள் யாரையும் நியமிக்காமல் தானாகவே வாதாடினார். மேலும் ஆறு மாதங்கள் மட்டும் வீட்டில் வசிக்க அனுமதி கேட்டார். ஆனால் அவரது கோரிக்கையை மறுத்துவிட்டார் நீதிபதி.
மேலும் நீதிபதி புன்னகைத்து கொண்டே உங்கள் பெற்றோருடன் பேசுங்கள்,ஆனால் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினார்.தற்போது அவரது பெற்றோர் மூன்று மாத காலம் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல்,இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும்,மூன்று மாதங்களுக்குள் வீட்டை விட்டு வெளியேறி நியூயார்க்கில் உள்ள கமிலியஸ் பகுதியில் குடியேறப் போவதாகவும் கூறினார்.மேலும் அந்த மூன்று மாதமும் அந்த வீட்டின் படுக்கை அரை ஒன்றில் தங்கிக்கொள்வதாக கூறி சென்றார்.