• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூருவில் தமிழக முதல்வர் பதவி விலகக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

May 26, 2018

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகக்கோரி பெங்களூருவில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதற்கிடையில் இந்த துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை தற்காப்புக்காக தான் நடத்தப்பட்டது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.இதை கண்டித்து துப்பாக்கிச் சூட்டுக்கு முதல்வர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில்,துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பழனிசாமி பதவிவிலக வேண்டும் என்றும்,தேசிய மனித உரிமை ஆணையம் தீவிர விசாரணை நடத்தி உண்மை அறிய வேண்டும் எனவும் பெங்களூருவில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க