May 26, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில், வன்முறை வெடித்ததையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும்,தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் சமூக வலைதளங்களில்,பரவும் வதந்தியைத் தடுப்பதற்காக கடந்த 5 நாட்களுக்கு மேலாக இணையதள சேவையை முடக்கி வைக்க,தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.