• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏலத்தில் ஆரம்பவிலை 5 கோடி நிர்ணயிக்கப்பட்ட எருமை

August 5, 2016 தண்டோரா குழு

முர்ரா ரக எருமைகள் பால் வளத்துக்கு மிகவும் புகழ் பெற்றவை ஆகும். சிறந்த பாரம்பரியமும், இனப்பெருக்க வளமும் கொண்ட இந்த எருமைகள் பல கோடி ரூபாய்க்கு விலை போகின்றன.இவற்றின் விந்துகளை விற்பனை செய்வதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு ஏராளமாக வருவாய் கிடைக்கிறது.

வட இந்தியாவின் இமாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமிர்புர் மாவட்டம் கோரி தவிரி ஊராட்சியைச் சேர்ந்தவர் நரேஷ் சோனி(44). நகைக்கடை உரிமையாளரான இவர் ஹிமாச்சலி ரஞ்சா என்னும் 30 மாத முர்ரா ரக எருமையை வளர்த்து வருகிறார்.

சுமார் 1,000 கிலோ எடையும், 13 அடி நீளமும், 5.8 அடி உயரமும் கொண்ட இதனை அவர் இன்று ஏலம் விட ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு சுமார் 5 கோடி ரூபாய் என ஆரம்ப விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தைக் குறித்த தகவல்கள் இணைய தளமான பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து நரேஷ் சோனி கூறும்போது, ஹரியானா மாநிலம் குருசேத்திரத்தைச் சேர்ந்த யுவராஜ் என்னும் எருமையை சுமார் 9 கோடி ரூபாய்க்கு மதிப்பிட்டுள்ளனர்.

எனவே, எனது ஹிமாச்சலி ரஞ்சா சுமார் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும், ஹிமாச்சலி ரஞ்சாவுக்கு தினமும் வழக்கமான தீவனங்களுடன் ஏராளமான ஆப்பிள்கள், சுமார் 2.5 கிலோ சோயாபீன், 2.5 கிலோ கொண்டைக் கடலை, 10 கிலோ மாட்டுத்தீவனம், மற்றும் ஒரு கிலோ நெய்யை அதற்கு உணவாக கொடுப்பதாகவும்.

இதைத் தவிர, அதன் மேனி பளபளப்பாக இருப்பதற்காகத் தினமும் சுமார் 2 லிட்டர் கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்தி மசாஜ் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார். இதனால் அதன் பராமரிப்புக்காக தினமும் சராசரியாக 1,500 ரூபாய் செலவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த விலை நிர்ணயத்திற்கு காரணமாக ரஞ்சா இன்னும் உடலுறவில் ஈடுபடவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஏலத்தில் பங்கேற்க, பிலாஸ்பூர் எம்.எல்.ஏ வான பாம்பெர் தாகூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சோனி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், சுமார் 5 கோடி ரூபாய் விலை மதிப்புடைய இந்த எருமையை ஏலம் விடப்படுவதைப் பார்க்க ஆவலாக இருப்பதாக எம்.எல்.ஏ தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க