• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வன்னிய சங்க தலைவர் காடுவெட்டி குரு காலமானார்

May 26, 2018 தண்டோரா குழு

வன்னியர் சங்கத்தலைவரும்,பாமகவின் முன்னணி தலைவரும்,முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு(57) காலமானார்.

வன்னியர் சங்கத்தலைவரும்,பாமகவின் முன்னணி தலைவருமான காடு வெட்டி குரு நுரையீரல் தொற்றால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிக்சிசை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் இவர் வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்துள்ளார்.அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குரு,பாமக சார்பில் 2முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க