• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை – பேஸ்புக் நிறுவனம்

May 25, 2018 தண்டோரா குழு

வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வலைத்தளம் பேஸ்புக்.சமீபத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்ளை திருடி,தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனை ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூகர்பெர்கும் ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.

இவ்விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இது தொடர்பான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஆஜராகினார்.அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,

பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டது உண்மை தான் என்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.அவரது இந்த விளக்கத்தால் சட்ட வல்லுநர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அதைப்போல் ஃபேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டது.ஆனால்,அதற்கு பதிலளித்த ஃபேஸ்புக் நிறுவனம் தனது அறிக்கையின் மூலம் இழப்பீட்டு தொகை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க