• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர் மழை!

May 25, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து காலை முதலே மழை பெய்து வருகிறது.தென் மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கோடை மழை சராசரி அளவை விட கூடுதலாக பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று வழக்கத்திற்கு மாறாக காலை முதலே கோவையில் காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர்,சூலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் வெயிலின் தாக்கம் என்பது முற்றிலும் குறைந்து குளிர்ந்த காலநிலை காணப்படுகிறது.தொடர் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது.நேற்று முதல் , இதுவரை 43 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக அன்னூர் பகுதியில் 16 மில்லி மீட்டர் மழையளவும், குறைந்த பட்சமாக வால்பாறையில் 1 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

மேலும் படிக்க