May 25, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்தும்,துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வலியுறுத்தியும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்த திமுகவினர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திமுகவின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில்,துப்பாக்கி சூடு நட்த்திய காவல்துறையினரை கண்டித்தும்,தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.மேலும்,அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.