May 25, 2018
தண்டோரா குழு
தூத்துகுடியில் துப்பாக்கி சூட்டைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்காமல் புறக்கணித்து கருப்பு துண்டு அணிந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்தனர்.
பின்னர் கருப்புத்துண்டு அணிந்து வந்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உடனடியாக துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.