• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக நடத்துவது நாடகம் என்றால், அதிமுக நடத்துவது கபட நாடகம் – மு.க ஸ்டாலின்

May 25, 2018 தண்டோரா குழு

திமுக நடத்துவது நாடகம் என்றால், அதிமுக நடத்துவது கபட நாடகம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,

நேற்று திமுக நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார். தமிழ்நாடே இன்று போராட்டக்களமாக மாறியிருக்கிறது.ஆட்சியில் இருப்பவர்கள் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை விரைவில் நாடு அறியும். மிசா சட்டத்தை திமுகவினர் சந்தித்துள்ளனர்.

வழக்குகளை கண்டு எங்களுக்கு கவலையில்லை.மேலும் தமிழகத்தில் சிறை போதாது என்பதால் தான் போராட்டத்தில் ஈடுபடும் திமுகவினரை சிறையில் அடைப்பது இல்லை.மேலும் சிறை செல்ல திமுகவினர் என்றும் தயங்கியதில்லை. நாங்கள் ஒன்றும் ஊழல் செய்து சிறைக்கு சென்றவர்கள் இல்லை என்றார்.

மேலும்,திமுக நடத்துவது நாடகம் என்றால்,அதிமுக நடத்துவது கபட நாடகம்.144 தடை உத்தரவு முதலமைச்சருக்கு பொருந்தாது என்றும்,இந்த அடிப்படை விஷயம் கூட முதலமைச்சருக்கு தெரியாதா? என்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் தாக்கியதால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதலமைச்சர் ஏன் கூறினார் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் தொடர்ந்தால் ஆட்சியாளர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, மணமக்களுடன் ஸ்டாலின் சாலைமறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க