ஆந்திர சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’ . இந்த படம் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சுதீப், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சீரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரித்துவருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஆந்திரா, தெலுங்கானா வெளியீட்டு உரிமை ரூ.150 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு நவம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டு அடுத்த வருடம் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு