May 24, 2018
தண்டோரா குழு
சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைதைக் கண்டித்து கோவையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முதல்வரிடம் பேச அனுமதி வழங்கவில்லை என கூறி தலைமை செயலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து கோவையை அடுத்த வடகோவை பகுதியில்,திமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசை கண்டித்து திமுகவினர் கோஷங்களை எழுப்பினர்.திமுகவினரின் போராட்டம் காரணமாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 80 க்கும் மேற்பட்ட திமுகவினர காவல் துறையினர் கைது செய்தனர்.