May 24, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே எனக்கான முதல் பணிதூத்துக்குடி புதிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் நடைபெற்ற பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதையடுத்து, தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ்யும்,எஸ்.பி மகேந்திரன் இருவரும் மாற்றப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி,எஸ்.பியாக முரளி ரம்பாவும் இன்று பதவியேற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தபோது செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே எனக்கான முதல் பணி.துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.அந்தக் கமிஷன் விசாரணையை தொடங்கவுள்ளது.கமிஷன் விசாரணை முடிந்த பிறகே நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இயலும்.மேலும்,அரசு மருத்துவமனையில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையில்லாமல் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.