May 24, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் நடைபெற்ற பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.60 – க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து,தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனினும் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில்,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.நடந்த சம்பவத்திற்காக மனவருத்தம் அடைவதாகவும்தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்ப மக்கள்ஒத்துழைக்க வேண்டும்என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.