May 24, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்,அவர் புஷ் அப் எடுக்கும் வீடியோ காட்சியை ட்விட்டரில் வெளியிட்டார்.அதன் பின் இதுபோன்று உடற்பயிற்சி எடுக்கும்படி கிரிக்கெட் வீரர் விராட் கோலி,பேட்மிண்டன் சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு சவால் விட்டார்.
இந்த சவாலை ஏற்ற வீரர் விராட் கோலி ஸ்பைடேர் பிளாங்க் (Spider Plank) செய்வதை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிவிட்டார்.அதன் பின் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த சவாலை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் கோலியின் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன் எனவும் விரைவில் நான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.