May 24, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கோவையில் பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தின் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக முக்கிய வணிக வீதிகளாக உள்ள டவுன்ஹால்,காந்திபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளது.இருப்பினும் மாநகரின் சில இடங்களில் கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டுள்ளது.
மேலும்,தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் வலியிறுத்தினர்.மாவட்டத்தில் 50% கடைகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில்,பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.