May 24, 2018
தண்டோரா குழு
முதல்வர் அறை முன் தர்ணா போராட்டம் நடத்தி வந்த மு.க.ஸ்டாலினை காவலர்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று வெளியேற்றியுள்ளனர்.
பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்றும் 13 பேரை கொன்ற விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் அறைமுன் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து,ஸ்டாலின் குண்டுக்கட்டாக காவலர்களால் வெளியேற்றப்பட்டர்.வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் 4-ம் எண் வாயில் முன்பு மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்.மேலும் தலைமைச்செயலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.