• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எழுத்தாளர் பிலிப் ரோத் காலமானார்

May 23, 2018 தண்டோரா குழு

அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவரான பிலிப் ரோத் நேற்று இயற்கை எய்தினார்.

அமெரிக்காவின் முக்கிய எழுத்தாளரான ரோத் நேற்று இதய செயலலிழப்பு காரணமாக இறந்தார். பிலிப் மில்டன் ரோத் மார்ச் 19, 1933ஆம் ஆண்டு நியு யார்க் நகரில் உள்ள நியூ ஜெர்ஸியில் பிறந்தார். 1956 இல் மார்கரெட் மார்டின்ஸனைச் என்கின்ற பெண்ணை சந்தித்து 1959 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். 1963 ஆம் ஆண்டில் அவரது மனைவி மார்டின்சன் ஒரு கார் விபத்தில் இறந்துபோனார்.

ரோத் 1959ஆம் ஆண்டில் குட் பாய் கொலம்பஸ் என்ற சிறுகதைக்காக நேஷனல் புக் விருதும், ஃபிக்ஷன் என்கின்ற விருதும் பெற்றார்.

இவர் எழுதிய பாலியல் தொடர்பான நாவல் அவரை அமெரிக்காவில் பிரபலமாக்கியது. அதன் பின் பல புகழ்பெற்ற வரலாற்று நாவல்களை எழுதினார். இவர் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டில் இனி எந்த தொலைக்காட்சியிலும் நான் தோற்றம் அளிக்க மாட்டேன் இதுவே கடைசியாக இருக்கும் என்று கூறினார்.இந்நிலையில் நேற்று அவர் இதய செயலலிழப்பு காரணமாக இயற்கை எய்தினார்

மேலும் படிக்க