• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினி இறுதியாக தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம்

May 22, 2018 தண்டோரா குழு

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்த செவிலியர் லினி இறுதியாக தனது கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலினால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,பெரம்பரா தாலுக்காவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை லினி என்ற செவிலியர் கவனித்து வந்துள்ளார். இதனால் லினியும் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். லினியின் உடலை பெற்றோரிடம் கூட ஒப்படைக்கப்படாமல் அவசர அவசரமாக சில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

லினிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், லினி தனக்கு மரணம் நிகலப்போவதை முன்னரே அறிந்து தன் கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “(சாஜி சேட்டா நான் மரணத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறேன். நான் உங்களை காண முடியாது என எண்ணுகிறேன். மன்னித்து விடுங்கள். நமது குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள். ஒன்றும் அறியாத குழந்தையை உங்களுடனே அழைத்து செல்லுங்கள். தந்தை இல்லாமல் அவர்கள் தனியாக இருக்கக்கூடாது) என லினி உருக்கமாக எழுதியுள்ளார்.

மேலும் படிக்க