• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி நீரை கேட்பதற்கு முன், கர்நாடக அணைகளை வந்து பார்க்கவும் – ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு

May 21, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்காக நீர் கேட்பதற்கு முன்னர் கர்நாடக அணைகளில் நீர் உள்ளதா என்பதை பார்க்க ரஜினிகாந்த் கர்நாடகா வர வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. ம.ஜ.த தலைவர் கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகாவில் பதவியேற்க உள்ள புதிய அரசு காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி,

கர்நாடகத்தில் உள்ள அணைகளில் நீர்இருப்பு குறைவாக உள்ள நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமில்லை. தண்ணீர் திறந்துவிடுமாறு கூறும் ரஜினிகாந்த், கர்நாடகத்துக்கு வந்து அணைகளின் நீர்இருப்பை பார்வையிடுமாறு அழைப்புவிடுக்கிறேன்.கர்நாடக விவசாயிகளின் நிலையை அறிந்துகொள்ளுமாறும், அதனைத்தொடர்ந்து, கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரலாம் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

மேலும் படிக்க