• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லண்டனில் இளவரசர் ஹாரி – மெகன் மார்கல் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

May 19, 2018 தண்டோரா குழு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரிட்டனின் இளவரசர் ஹாரி – நடிகை மேகன் மார்க்கல் திருமணம், லண்டன் அருகே, விண்ட்ஸர் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில், இன்று கோலாகலமாக நடந்தது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகனும், பிரிட்டன் அரியணையின் ஐந்தாவது இளவரசருமான ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மெகன் மார்கல் திருமணம் இன்று விண்ட்சர் கேசிலின் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அரச குடும்பத்தின் இந்த திருமணத்தில் நேரில் கலந்துகொள்ள இங்கிலாந்து மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்துள்ளனர்.

திருமணத்தையொட்டி, பிரிட்டனில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமணத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில்,மணமகள் மேகன் மார்கலின் தந்தை பங்கேற்கவில்லை. இந்நிலையில் திருமணத்தின்போது மணப்பெண் மெகன் மார்கல்லை தந்தை ஸ்தானத்தில் இருந்து இளவரசர் சார்லஸ் தேவாலயத்திற்கு அழைத்து வந்தார்.

பின்னர், மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டனர். திருமணம் முடிந்தவுடன், ஹாரி மற்றும் மெகன், குதிரை பூட்டிய சாரட் வண்டியில், விண்ட்சரின் தெருக்களில் வலம் வந்தார்கள். இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க